Radha Radha Nee Song Lyrics

ராதா ராதா நீ எங்கே பாடல் வரிகள்

Meendum Kokila (1981)
Movie Name
Meendum Kokila (1981) (மீண்டும் கோகிலா)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
ராதா ராதா நீ எங்கே

கண்ணன் எங்கே நான் அங்கே

ராதா ராதா நீ எங்கே

கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்

பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

ராதா ராதா நீ எங்கே


நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நாணலில் பாய் விரித்து
நான் அதில் பள்ளிக் கொண்டேன்
நானொரு பக்கம் ஏனடி வெட்கம்
என்ன சொல்லிவிட்டேன்
இளமை வீணையில் புதிய ராகங்கள்
போதையில் மூழ்கிவிட்டேன்..

கண்ணா கண்ணா நீ எங்கே

ராதா எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்

பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

கண்ணா கண்ணா நீ எங்கே


காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
காலடி ஓசையிலே யாழ் இசை கேட்டு வந்தேன்
கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில்
கவிதை பாடி வந்தேன்
இடையில் மேகலை நடனமாடிடும்
ஊக்கத்தில் ஓடி வந்தேன்

ராதா ராதா நீ எங்கே

கண்ணன் எங்கே நான் அங்கே

என் உள்ளம் புது வெள்ளம்

பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்

ராதா

கண்ணா

நீ எங்கே