Enna Aachi Song Lyrics

என்ன ஆச்சு என்னக்கு பாடல் வரிகள்

Vedi (2011)
Movie Name
Vedi (2011) (வெடி)
Music
Vijay Antony
Singers
Janaki Iyer, Vijay Yesudas
Lyrics
Na. Muthukumar

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..
என் வானிலே வெண்ணிலா உன் முகம்..
வாராமலே பேசுதே என்னிடம்..
இது காதலா காதலா?

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..

ராத்திரிகள் நேரம் ரதி தேவி மத கோலம்
கனவாக தினம் தோறும் வர கண்டேனே..
சாலைகளின் ஓரம் நிழல் தேடும் வெயில் நேரம்
தொட பார்க்கும் சிறு காற்றாய் உன்னை கண்டேனே..
புதை மண்ணிலே காலை வைத்தேன்..
நக கண்ணிலே ஊசி தைதேன்..
படும் வேதனை சொல்லும் காதலாய்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
www.tamilpaa.com

வீடுவரை சென்றேன் படி ஏறவில்லை நின்றேன்
என்னை தேடி வருவாயோ என பார்த்தேனே..
பாடம் படிக்காமல் உயிர் தோழி பிடிக்காமல்,
நகராத கெடிகாரம் அதை பார்த்தேனே..
நிலா ஆண்டுகள் நூறு வேண்டும்..
இதே போலவே வாழ வேண்டும்..
உடல் என்னிடம்.. உயிர் உன்னிடம்..

என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
எங்குமே உன் முகம் பார்கிறேன்..
என்ன ஆச்சு என்னக்கு என்ன ஆச்சு
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்..
என் வானிலே வெண்ணிலா உன் முகம்..
வாராமலே பேசுதே என்னிடம்..
இது காதலா காதலா?