Aadhi Mudhale Song Lyrics

ஆதி முதலே பொன் பாடல் வரிகள்

Babu (1971)
Movie Name
Babu (1971) (பாபு)
Music
M. S. Viswanathan
Singers
Lyrics
ஆதி முதலே பொன் ஆதி முதலே
ஆனை முக ஐங்கரனே ஓடி வருவாய்

ஆதி முதலே பொன் ஆதி முதலே
ஆனை முக ஐங்கரனே ஓடி வருவாய்

தொப்பை அப்பா ஓடி வா
தொந்தி அப்பா ஓடி வா 
மூலையிலே குந்திருக்கும் விக்னேஸ்வரா
கீசகன் நாடகத்த முன் நடத்த 
வேண்ணும் ஐங்கரா 

கீசகன் நாடகத்த முன் நடத்த 
வேண்ணும் ஐங்கரா 

விராட ராஜன் நாட்டிலே 

ஓஹோ

மாறு வேடம் பூண்டிருந்த 

ஆமாம்

பாண்டவர்களின் பத்தினியாம் பாஞ்சாலி...
சைரேந்திரியாக

ஆமாம்

சோலையிலே பூ பறிக்க வந்த விதம் காண்க...

காண்க... யா

ஆனந்தம் ஆரண்யம் ஆ... ஆ...
ஆனந்தம் ஆரண்யம்
அது தரும் மான் தான் ரம்மியம்
ஆடி பாடி நாம் மலர் பறிப்போம்
ஆனந்தமாக மகிழ்ந்திருப்போம்
மல்லிகை முல்லை சம்பங்கி மனம் கவர் மோகன
தாமரை உண்டு என் பாங்கி

மல்லிகை முல்லை சம்பங்கி மனம் கவர் மோகன
தாமரை உண்டு என் பாங்கி

மல்லிகை முல்லை சம்பங்கி 
பார்த்தாயா என் பாங்கி

பார்த்தேனே ஹஹஹா...

ஆ... யார் நீ

ஆ... என்னையா யார் என்று கேட்டாய்

ஆங்...
அண்ட ரெண்டம் எல்லாம் அடங்கிட நடுங்கிட 
கண்ட பேர்களெல்லாம் கலங்கிட குலுங்கிட 
வீர சூர பரக்கிராம சூரன் 
முடி மன்னரின் தலை தனையே பொடி செய்திடும்
முடி மன்னரின் தலைதனையே பொடி செய்திடும்
கீசக ராஜன் நானே...

கேளாய் பெண் பாவாய்
விராட மஹாராஜனின் வீர மைத்துனன் நான்

நீ யாரக இருந்தால் என்ன
அன்னியன் மனைவியை 
அபகரிக்க எண்ணும் நீ 
புண்ணியன் அல்ல புல்லன் 

புல்லன் அல்ல
உன் உள்ளம் கவர் கள்ளன் ஆங்...

ஆசைக்கிசைந்த கன்னாட்டி
அறிவை சவுந்தரி நாயகி வாடி
அடி ஆசைக்கிசைந்த கன்னாட்டி

அட துஷ்டா
துஷ்டா நீ தூர நில்லடா கிட்ட வராதே
துஷ்டா நீ தூர நில்லடா 

கிட்ட வராதே

தொட்டால் பாதகம் சொல்லடா ( இசை )

கச்ச வருஞ்சி கட்டி...
கச்ச வருஞ்சி கட்டி கரும் கச்ச சுங்கம் இட்டு
கச்ச வருஞ்சி கட்டி கரும் கச்ச சுங்கம் இட்டு
பச்ச சிலுக்கி கட்டி சந்திர காந்தம் பட்டுடுத்தி 
பச்ச சிலுக்கி கட்டி சந்திர காந்தம் பட்டுடுத்தி 
பீம சேன ராஜன் வந்தேனே
என் ஜுகில பாலிகா 
பீமா சேன ராஜன் வந்தேனே
என் ஜுகில பாலிகா 
பீமா சேன ராஜன் வந்தேனே

கண்ணே திரௌபதா 
அன்றலர்ந்த தாமரை போன்ற உன் முகம்
இன்று ஏன் வாடியது

நாதா என்னனு நான் சொல்லுவேன்
நந்தவனத்தில் இடர் வந்த விதம் விள்ளுவேன் 
அநீதமாக ஒரு அசுரன் எந்தனை வந்து 
பொல்லாத வார்த்தை பேசி 
பாவை என்னை சேரும் என்றான் 
மன்னா என் மன்னா...

பஜாப் அப்படி செய்தவன் யாரடி அவனை 
அகம் செய்து வருகிறேன் பாரடி
அப்படி செய்தவன் யாரடி அவனை 
அகம் செய்து வருகிறேன் பாரடி
எப்படிச் சொல்லுவான் எண்ணிப் பாராமலே 
தப்பிய பயலே தண்டனை செய்குவேன்
அப்படி செய்தவன் யாரடி யாரடி யாரடி 

யாரடி கண்ணே திரௌபதா 
அந்த நயவஞ்சகனை நயந்து பேசி 
உனது சயன அறைக்கு இழுத்து வா
அவன் ரத்தத்தை குடித்து விடுகிறேன் ஹா...

வில்லால் அடிக்கிறாண்டி மம்முதன் 
வில்லால் அடிக்கிறாண்டி ( இசை )

பல்லாக்கு போல் நடக்கும் புல்லாக்கு சுந்தரியே 
நீ தாண்டி ராஜாத்தி நான் தாண்டி மந்திரியே

வில்லால் அடிக்கிறாண்டி மம்முதன் 
வில்லால் அடிக்கிறாண்டி 

பிரபு...
என்னையும் தான் கொல்லுதே விரகம்
நீங்க இல்லாட்டி எல்லாமே நரகம்
நீங்க இல்லாட்டி எல்லாமே நரகம்

வருந்ததே வனிதா மணியே...
விரக தாபம் தீர்க்க 
வருகிறேன் பள்ளி அறைக்கு ரவைக்கி ( இசை )

பெண்ணே பெண்ணே பெண்ணே 
ஆ... என்ன இது 
லைட்டா இருக்க வேண்டிய பெண்ணின் கை 
வெயிட்டா இருக்கு

ஆஹா நடை என்ன நடையோ
நடமாடும் தேரோ
இடை என்ன இடையோ
எலுமிச்சை கொடியோ
முன் அழகு என்ன முந்நூறு பெறுமோ
பின்னழகு என்ன பல நூறு பெறுமோ

அன்பரே நீர் என்னை நேசிப்பதாக இருந்தால் 
ஆசைக் குத்து ஐநூறும் மோகக் குத்து முந்நூறும் 
வாங்கிக் கொள்ள வேண்டும்
ஆஹா ஆஹா இந்தாரும் மொத குத்து

அம்மாடி... என்னடா இது 
மொத குத்துலேயே தணாஞ்சு போவுது
இன்னும் வாங்கிக்க
ஹையோ

ஹஹஹஹஹஹா...
ஆரடா பயலே இந்த அகங்கார கர்வம் கொண்டு 
போரடா செய்ய வந்தாய்
புலிக்கு முன் பூனையை போல
தாறுமாறாக உன்னை 

தண்டிப்பேன் உன்னைப் பாராடா 
கதையினாலே துண்டிப்பேன் உன்னைப் பாரடா
டாடாடாடா சம்ஹரிப்பேன் உன்னைப் பாரடா
அடடா துஷ்டா
பெண் கோபம் கொண்டேன் ஓடடா... 

ஆனையும் எனக்கு பூனையை போல 
நீ எந்த மூலை முட்டாள்
நான் ஒருத்தனல்லடா எட்டாள்
நெஞ்சு குழியிலே எட்டி ஒதைப்பேன்
ரத்தம் ஆறா பெருக நாரா கிழிப்பேன்
அந்த பக்கம் இந்த பக்கம் போகாதே
ஒத பட்டு மிதி பட்டு சாகாதே
ரெண்டா ஒடிப்பேன் ரத்தத்தை குடிப்பேன் 
அடிப்பேன் கடிப்பேன் முறிப்பேன் மிதிப்பேன்
வாங்கிக்க வாங்கிக்க கும்கள கும்மா
இந்தாடி சும்மா அப்பா
வாங்கிக்க ஐயோ
வாங்கிக்க ஐயோ வலிக்குது
ஐயோ பாபு வலிக்குது