Nee Entha Ooru Song Lyrics

நீ எந்த ஊரு பாடல் வரிகள்

Thirupaachi (2005)
Movie Name
Thirupaachi (2005) (திருபாச்சி)
Music
Devi Sri Prasad
Singers
Tippu
Lyrics
Perarasu
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
தொப்புள் கொடி உறவா – இல்ல இல்ல
அட கட்சிக்கொடி உறவா – இல்ல இல்ல
ஹேய் மேட்டுகுடி உறவா – இல்ல இல்ல
அட கல்ளுக்கட உறவா – இல்லவே இல்ல
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல

சாமி வரம் தந்திட்டா கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்குண்டா
நான் அய்யனாரு பக்தண்டா
மன்ன நம்பி வேரு
வின்ன நம்பி ஆறு
என்ன நம்பி யாரும் கெட்டதில்ல பாரு
உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னுசேர்த்து பாரு இந்தியன்னு பேரு
பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில
பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல

அம்மை அப்பன் தானடா நம்மையாளும் சாமிடா
கருவறை தோழிடா நம்ம உயிர் நாடிடா
கண்ண பொத்தி வாழு
காத பொத்தி வாழு
வாய பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு
ஆத்திகம் தான் மூச்சு சத்தியம் தான் பேச்சு
ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடி எத்து

அட பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில
பொறப்பும் இறப்பும் அவன் கையில நாம வாழும் வாழ்க்க நம்ம கையில

நீ எந்த ஊரு
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தம் இல்ல
தொப்புள் கொடி உறவா – இல்ல இல்ல
அட கட்சிக்கொடி உறவா – இல்ல இல்ல
ஹேய் மேட்டுகுடி உறவா – இல்ல இல்ல
அட கல்ளுக்கட உறவா – இல்லவே இல்ல
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா
ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அன்னன் தம்பிடா
நாம அன்னன் தம்பிடா