Kadhalika Poiya Solla Song Lyrics

காதலிக்க பொய்யை சொல்லு பாடல் வரிகள்

Dinasari (2025)
Movie Name
Dinasari (2025) (தினசரி)
Music
Ilaiyaraaja
Singers
Bhavatharani, Ranjith
Lyrics
A. L. Vijay
காதலிக்க பொய்ய சொல்ல
அதுவே முக்கியம்
பெண்ணுக்கெல்லாம் அது தான் வேண்டும்
சர்வ நிச்சயம்

காதலிக்க பொய்ய சொல்ல
அதுவே முக்கியம்
பெண்ணுக்கெல்லாம் அது தான் வேண்டும்
சர்வ நிச்சயம்

பெருமைக்குப் பெண்கள் மயங்கி நிற்பாரே
ஊரார்கள் போற்ற விரும்பி கேட்ப்பாரே
தவராமல் இதிலே நீயும் கவனம் காட்டு

பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

உன்னை போல் இங்கே
உலகெங்கும் இல்லை
உண்மைகள் சொல்ல சொல்லேதும் இல்லை
காலம் உன்னை என்னை சேர்த்த திங்கே
சொர்கத்தின் வாசல்கள்
வழிவிட்டு திறக்கட்டும்
நம் வாழ்வை நலமாக்க
வரவேற்கட்டும்

பொன்னின் வண்ணம்
உன் அழகின் பக்கம் வருமா
உன் எழில்
வெட்கப்பட்டு எட்டி நிற்குமா

பட்டம் கட்டிட
வெற்றி சங்குடன்
…..நிற்கிறது
பக்க தரிசுகள்
தத்தும் தரிசுடன்
கூட்டம் சேர்கிறது

தேசத்தின் ராணிக்கு
நேசத்தின் பரிசென்ன
ஏழுலகை தந்தாலும்
அது இங்கே சிறிதாகும்
விலையில்லா பாசமும் நேசமும்
உன் மகிழ் அன்புடன் மனமாற
ஜீவனோடு வைத்தேன்

பாக்கும் வெற்றிலை மாற்றி கொண்டதும்
நிச்சயம் ஆகிறது
சுற்றும் சூழ்ந்த முஹூர்த்தம் சேர்ந்து
சுபா நாள் குறிக்கிறது

குத்து விளக்குகள் பூக்களின் மொட்டுகள்
மேடையில் குவிகிறது
மாற்றும் மாலையும் கட்டும் தாலியும்
நிம்மதி ஆக்கியது

யாருக்கும் நல்வாழ்வு இது போல
அமையாது
ஊர் போற்றும் ஒரு ஜோடி இனிமேலும் கிடையாது
இருவேறு பாதைகளில் இருந்தவர்
ஒன்றென சேர்ந்தனர் இனிமேலும் வேற என்ன ஆகும்

மாறி போகும் பாதை சேர்ந்தால்
ஒன்று என்பதா
வேறு வேறு நோக்கம் கொண்டால்
நன்று என்பதா

வேறு ஓர் பாதை செல்வோர் சேர்ந்தால்
பயணம் எப்படி
நோக்கம் வேறாய் ஆனோர் சேர்ந்தால்
வாழ்வு எப்படி