Samsaram Enbathu Veenai Song Lyrics

சம்சாரம் என்பது வீணை பாடல் வரிகள்

Mayangukiral Oru Maadhu (1975)
Movie Name
Mayangukiral Oru Maadhu (1975) (மயங்குகிறாள் ஒரு மாது)
Music
Vijaya Bhaskar
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை


என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக் கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை


தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலம் தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை