Vaayadi Song Lyrics

வாயாடி பாடல் வரிகள்

Tenaliraman (2014)
Movie Name
Tenaliraman (2014) (தென்னாலிரமன்)
Music
D. Imman
Singers
Viveka
Lyrics
Viveka
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி
குதிரையை போல குதிக்கும் உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
குதிரையை போல குதிக்கும் உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
திமிரில்லாத பெண்தான் தேவதை தெனாலிராமனின் கருத்து
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

வழுக்கை தலையர்கள் ஊரில் நான் சீப்புகள் வித்திடும் ஆளு
என் கடையில் கேட்டால் கிடைக்கும் அடி காளை மாட்டு பாலு
கண்டபடி பழுத்து மின்னும் இரு கனியாய் கன்னங்களை பார்த்தேனே
வந்தவனை இழுத்து தண்டனைகள் கொடுக்கும் மண்டைக்கனம் வேண்டாமே
ஆடாதே பெண்ணே கொஞ்சம் அடங்கி போக பழகிவிடு
ஏ வாயாடி, ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

தானே நானா தானே நானா …

கரையை மறந்த நதியோ அலைகடலை சேராது பெண்ணே
பணிவே இல்லாத அழகால் ஒரு பலனும் நேராது கண்ணே
சல்லடைக்குள் நீரை தேக்கி வைக்க நினைத்தால் சத்தியமாய் முடியாது
மல்லிகையின் காம்பு கல்லொடைக்கும் உளியாய் இருந்திட கூடாது
பூவாடை வீசிடும் பெண்ணே சொன்னது புரிந்தால் பெண்ணாவாய்
ஏ வாயாடி
வழியில போற ஆண்களை எல்லாம் வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன உங்க பரம்பரை நோயாடி

தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே
தானே நானே தன்னனே நானே தான நாணனே தானானே