Solladi Abirami Song Lyrics

சொல்லடி அபிராமி பாடல் வரிகள்

Aathi Parasakthi (1971)
Movie Name
Aathi Parasakthi (1971) (ஆதி பராசக்தி)
Music
K. V. Mahadevan
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
ஆண் : மணியே
மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த
வாணியே அதும் அணிகலகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்
பெரும் விருந்தே பணியேன்
ஒருவரை நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே

ஆண் : சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
{ வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி } (2)

ஆண் : நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே முழு
நிலவினை காட்டு உன்
கண்ணாலே சொல்லடி
அபிராமி

ஆண் : { பல்லுயிரும்
படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ } (2)

ஆண் : நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த
சொல் அல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ

ஆண் : சொல்லடி அபிராமி

ஆண் : { வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ } (2)

ஆண் : வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே கொடிகள்
ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து
ஆடும் கலை அழகே

ஆண் : பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் தேவி
நீ கொட்டி வரும்
மத்தளமும் சத்தமிட

ஆண் : வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ

ஆண் : செங்கையில் வண்டு
களின் களின் என்று ஜெயம்
ஜெயம் என்றாட இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட இரு கொங்கை கொடும்
பகை என்றென்ன மென்று குலைந்து
குலைந்தாட

ஆண் : மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட விரைந்து
வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

ஆண் : காளி பயங்காரி
சூலி மதங்கனி கண்களில்
தெரிகின்றாள் கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றாள்

ஆண் : வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

ஆண் : அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஆண் : ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம்