Kannae Karisal Song Lyrics

கண்ணே கரிசல் பாடல் வரிகள்

Vaigasi Poranthachu (1990)
Movie Name
Vaigasi Poranthachu (1990) (வைகாசி பொறந்தாச்சு)
Music
Deva
Singers
Jayachandran
Lyrics
ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
கண்ணீரில் நீந்துகின்ற மீனே (இசை)

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே
மானே கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

***

ஆண் : ஊத்து மணலெடுத்து
உப்புக் கடல் நீரெடுத்து
நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை
இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே
ஆத்து நீர் நுரையாச்சே
அவள் சொந்தம் அவமான கதையாச்சே
அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே
ஏத்தி வச்ச விளக்காய்
உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே
இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே
மானே கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

பெண் : ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ

***

ஆண் : கண்ணீரின் திரைக்குள்
கட்டாய சிறைக்குள்
பூட்டி அடைச்சு வச்ச பாசம்
இதில் போட்டு நடத்தி வரும் சோகம்
ஓயாத புயலாலே தூங்காமல்
போராடும் அலை மேலே
மனம் தாங்காத சுமையுடன்
தள்ளாடி தள்ளாடி
கரைதனை தேடுதோ படகு
இந்தக் கதைக்குத்தான்
தெரியல முடிவு

கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே
மானே கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே