Idhu Porkkalama Song Lyrics

இது போர்களமா இல்லை தீ குளமா பாடல் வரிகள்

7G Rainbow Colony (2004)
Movie Name
7G Rainbow Colony (2004) (7ஜி ரெயின்போ காலனி)
Music
Yuvan Shankar Raja
Singers
Harish Raghavendra
Lyrics
Na. Muthukumar
ஆண் : { இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே } (2)

பெண் : ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : தீயின் மனமும்
நீரின் குணமும் தெளித்து
செய்தவள் நீ நீயா தெரிந்த
பக்கம் தேவதையாக தெரிய
பக்கம் பேய் பேயா

ஆண் : நேரம் தின்றாய்
நினைவை தின்றாய்
என்னை தின்றாய் பிழை
இல்லயா

ஆண் : வேலை வெட்டி
இல்ல பெண்ணே வீட்டில்
உனக்கு உணவில்லையா

ஆண் : இரு விழி உரசிட
ரகசியம் பேசிட இடி மழை
மின்னல் ஆரம்பம்

ஆண் : பாதம் கேசம்
நாபிக்கமலம் பற்றி
கொண்டதும் பேரின்பம்

ஆண் : தகதகவென
எரிவது தீயா சுடசுட
வென தொடுவது நீயா
தொடு தொடு வென
சொல்லுகின்றாயா
கொடு கொடு வென
கொள்ளுகின்றாயா

பெண் : ஈ ஈ ஈ ஈ

ஆண் : நண்பர் கூட்டம்
எதிரே வந்தால் தனியாய்
விலகி நடக்கிறேன்

ஆண் : நாளை உன்னை
காண்பேன் என்றே நீண்ட
இரவை பொறுக்கின்றேன்

ஆண் : இப்படி இப்படி
வாழ்க்கை ஓடிட இன்னும்
என்ன செய்வாயோ

ஆண் : செப்படி வித்தை
செய்யும் பெண்ணே சீக்கிரம்
என்னை கொள்வாயோ

ஆண் : எந்த கயிறு
உந்தன் நினைவை
இறுக்கி பிடித்து
காட்டுமடி

ஆண் : என்னை எரித்தால்
எலும்பு கூடும் உன் பேர்
சொல்லி அடங்குமடி

ஆண் : பட பட வென
படர்வதும் நீயா விடு
விடு வென உதிர்வதும்
நீயா தட தட வென அதிர
வைப்பாயா தனிமையிலே
சிதற வைப்பாயா

ஆண் : இது போர்களமா
இல்லை தீ குளமா விதி
மாற்றிடும் காதல் புரியாதே