Kankalum Kaavadi Song Lyrics

கண்களும் காவடி பாடல் வரிகள்

Enga Veettu Pillai (1965)
Movie Name
Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை)
Music
Viswanathan Ramamoorthy
Singers
L. R. Eswari
Lyrics
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

ஆ.. கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்