Oru jeevan azaithathu Song Lyrics

ஒரு ஜீவன் அழைத்தது பாடல் வரிகள்

Geethanjali (1985)
Movie Name
Geethanjali (1985) (கீதாஞ்சலி)
Music
Ilaiyaraaja
Singers
Lyrics
ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் 
என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை 
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னை நான் கண்ட நேரம் 
நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் 
எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்