Sollayo Solaikilli Song Lyrics

சொல்லாயோ சோலைக்கிளி பாடல் வரிகள்

Alli Arjuna (2002)
Movie Name
Alli Arjuna (2002) (அல்லி அர்ஜுனா)
Music
A. R. Rahman
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha
Lyrics
Vairamuthu
சொல்லாயோ சோலைக்கிளி 
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடி சொல்லுதே நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி சொல்லி கடந்த காதல் இது
கண்ணோரம் காதல் பேசுதே

பச்சைக்கிளி இலைகளுக்குள்ளே 
ஒற்றைக் கிளி ஒலிதல் போல
இச்சை காதல் நானும் மறைத்தேன்
பச்சைக்கிளி மூக்கை போல
வெட்கம் உன்னை காட்டிகொடுக்க
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்
பூவில்லாமல் சோலை இல்லை 
பொய் இல்லாமல் காதல் இல்லை
பொய்யை சொல்லி காதல் வளர்த்தேன்
பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு 
மெய்யின் கையில் ஒற்றை சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்

சேராத காதலுக்கெல்லாம் 
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை அளப்போம்
புதிய கம்பன் தேடி பிடித்து 
லவ்வாயணம் எழுதிட செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம்
கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்
நெஞ்சும் நெஞ்சும் மோதிக்கொள்வோம் 
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்
பூவும் பூவும் மோதிக்கொண்டால்
தேனை தானே சிந்தி சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்
(சொல்லாயோ..)