Karuvakaatu Karuvaaya Song Lyrics

கருவகாட்டு கருவாயா பாடல் வரிகள்

Marudhu (2016)
Movie Name
Marudhu (2016) (மருது)
Music
D. Imman
Singers
Jithin Raj, Vandana Srinivasan
Lyrics
Vairamuthu
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா

கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா

நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா

தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆளு

குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு

தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா

ஏய் பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ணப்போறேன்

சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்டப்புள்ள தாரேன்

பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சோ்ந்திருப்போம்
தயிரு மோரா மாறுமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உன்கிட்ட
குடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு
இருக்கணும் உறவா

நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

கருவகாட்டு கருவாயா