Arumbum Thalire Song Lyrics

அரும்பும் தலிரே பாடல் வரிகள்

Chandralekha (1995)
Movie Name
Chandralekha (1995) (சந்திரலேக்கா)
Music
Ilaiyaraaja
Singers
Arun Mozhi
Lyrics
Vaali
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே!
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் ​பார்வையே ​!
வானாடும் மீனே நீதானே வேண்டும்.
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்.

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
அரும்பும் தலிரே!...

இனிமையான பொன் மாலை வேளை வலை ஒசை தூது வந்ததே!
இளைய ராணி வரும் நேரம் என்று இனிப்பான சேதி சொன்னதே!

 பூ மாலை நீ சூடவே பாவையாய் மன்னில் தோன்றினேன்!.

 என் ஜீவன் நீயாகவே எனதெல்லை நானும் தாண்டினேன்!.

 வானும் பூமி வாழும் காலம் நானும் நீயும் வாழலாம்.

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பார்வையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்

தலைவனாக நீ வேண்டும் என்று திருக்கோயில் தீபம் ஏற்றினேன்.
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி
குழல் மீது பூவை சூட்டினேன்.

தேன் ஆற்றில் நீராடவே தேடினேன் தேடி வாடினேன்.

நான் சூடும் நூலாடையாய் உனைத் தானே நாளும் சூடினேன்.

ராஜ ராஜன் கூடும்போது ராஜ யோகம் வாய்த்தது

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
மலரும் மனமே மனம் ஏந்திடும் கனியே கனிப் பார்வையே
வானாடும் மீனே நீதானே வேண்டும்
ஊனாடும் உயிரே நீதானே வேண்டும்