Nenje Nenje Song Lyrics

நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்

Tenaliraman (2014)
Movie Name
Tenaliraman (2014) (தென்னாலிரமன்)
Music
D. Imman
Singers
Viveka
Lyrics
Viveka
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
காலம் நமது கையில் வந்து சேருமே
கண்ணீர் என்றால் என்ன கண்கள் கேட்குமே
அட வசந்தங்கள் தோன்றும்
மன வருத்தங்கள் தீரும்
இனி வாழ்க்கை எல்லாம் வானவில்லாய் மாறும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே

ஓ… புயலின் வேகம் தீண்டி மரங்கள் கீழே சாயும்
மரங்கள் சாய்ந்தால் என்ன விதைகள் தூவி போகும்
கடுகின் அளவு நம்பிக்கை இருந்தால் கடலும் சிறுதுளி தானே
வழியில் தெளிவும் மனதில் உறுதியும் இருந்தால் உயர்ந்திடுவோமே
காற்றோடு வாசம் நீந்தும் கண்ணுக்கு தெரிவது இல்லை
உனக்குள்ளே எல்லாம் உண்டு அதை நீ அறிவது இல்லை
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே

தலையே சுமைதான் என்று நினைக்கும் ஆளும் உண்டு
மலையே வந்தால் கூட சுமக்கும் ஆளும் உண்டு
துணிவை நாமும் துணையாய் கொண்டு போவோம் மேலே மேலே
இதயம் பறவையாகும் பொழுது இமயம் காலின் கீழே
விலகாத பனியும் இல்லை விடியாத நாளும் இல்லை
உடையாத தடைகள் இல்லை உனக்கிணை யாரும் இல்லை
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே நாளையே நினைத்தது யாவும் நடக்கும்
நீரில் போட்ட கோலமாய் சோகம் தானாய் மறையும்
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே