Yea Dushyantha Song Lyrics

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா பாடல் வரிகள்

Asal (2010)
Movie Name
Asal (2010) (அசல்)
Music
Bharathwaj
Singers
Surmukhi
Lyrics
Vairamuthu
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய்
மறந்தது என்ன கதை
(ஏ துஷ்யந்தா..)

அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்
(ஏ துஷ்யந்தா..)

மான் ஆடும் மலை பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல் கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..