Kombulae Poov Suthi Song Lyrics
கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பாடல் வரிகள்
- Movie Name
- Virumaandi (2004) (விருமாண்டி)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Kamal Haasan
- Lyrics
- Ilaiyaraaja
கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு
கன்னிப் பொண்ணு கை வளத்த காள மாடு
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடு
முட்டுனா தும்ப கட்டு வண்டியில ஏற கட்டு
மொபெட்டு முன்ன வந்து மொகம் காட்டு
செம்பட்டி சந்த வித்தா செம்ம ரேட்டு
ஆத்தாடி அன்னலச்சுமி தோத்தாடி பந்தயத்துல
கோவிப் பட்டி கொட்டு தட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு (கொம்பில)
எத்தன தழும்பிருக்கு வந்து எண்ணிக் கொள்ளு
நெஞ்சில வீரத் தழும்பு
ஒண்ணு ரெண்டு இன்னு
குத்தின காளைங்க இப்போ பொண்டித் தொழுவத்தில்
எத்தன பட்டியல் உண்டு....டமுக்கு டமுக்கு டக்கா
இடுப்புல வார கழட்டவா.....யாயயா யாயாயா
கிழிஞ்ச அடையாளம் காட்டவா...யாயாயா யா
நெஞ்சில தெம்பு இப்ப புரிஞ்சிருக்கும்
உன் காள வந்து எம் முதுகச் சொறிஞ்சு நிக்கும்
சேலை கண்டா வாலை ஆட்டும் காளை இல்ல நானும்
வேலையில கண்டு கொள்ளு....(கொம்புல)
ஆளான பொண்ணுக்கு இங்கே நாளும் கெழமையில்
ஆளொண்ணும் இல்லாம போனால்
மேல என்ன சொல்ல
தோளுக்கு தொணையத் தேடு தோழன் ஒண்ண தேடு
காளைய கழட்டி ஓட்டு.....டமுக்கு டமுக்கு டக்கா
கெழக்கால ஊரு ஓரமா......யாயயா யாயாயா
கெளப்பு கடை ஒண்ணு போடுமா..யாயாயா யா யாயா
இட்டிலிக்கு மாவரைக்க...நாங்க வாரோம்
புட்டுக்குன்னும் கூட்டம் கூட்டி நாங்க தாரோம்
நல்ல நேரம் வந்துருச்சு நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்லே.......
கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு