Manamilla Malarukkor Song Lyrics

மணமில்லா மலருக்கோ பாடல் வரிகள்

Thuli Visham (1954)
Movie Name
Thuli Visham (1954) (துளி விசம்)
Music
K. N. Dandayudhapani Pillai
Singers
P. Leela
Lyrics
K. P. Kamatchi Sundharam

மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை - நல்ல
குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை

லட்சணமில்லா தமிழுக்கோ
இனிமை இல்லை
லட்சியமில்லா வாழ்வுக்கோ
பயனுமில்லை.......(மணமில்லா)

அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சிமில்லாமல் வாழ
அறிவும் திறனும் நெறியும் வேண்டும் (மணமில்லா)