Ondrum Ariyatha Song Lyrics

ஒன்றும் அறியாத பாடல் வரிகள்

Idhayakkani (1975)
Movie Name
Idhayakkani (1975) (இதயக்கனி)
Music
M. S. Viswanathan
Singers
T. M. Soundararajan
Lyrics
Vaali
புன்னகையில் கோடி பூங்கவிதை
பாடி கண்ணிரண்டில் மேவி
காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி
உன் போலே இன்னொருத்தி ஏது
விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது


ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடிஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கானா வடிவத்தை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஒன்றும் அறியாத பெண்ணோ