Thooriga Song Lyrics

தூரிகா பாடல் வரிகள்

Navarasa (2021)
Movie Name
Navarasa (2021) (நவரச‌)
Music
A. R. Rahman, D. Imman, M. Ghibran
Singers
Karthik
Lyrics
Madhan Karky
ஹே விழும் இதயம் ஏந்திப்பிடி
ஹே அதில் கனவை அள்ளிக்குடி
ஹே குறுஞ்சிறகு கோடி விரி
வா என் இதழில் ஏறிச் சிரி
கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா... என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை வேர்களைக்
கொய்கிறாய்
 
நான் துளி இசையில் வாழும் இலை
நீ எனை தழுவ வீழும் மழை
வேர் வரை நழுவி ஆழம் நனை
நீர் என உயிரில் நீயும் இணை
பியானோ பற்கள் மேலே நின்று
ஆடும் மயிலானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா... என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை வேர்களைக்
கொய்கிறாய்
 
தூரிகா... என் தூரிகா
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை வேர்களைக்
கொய்கிறாய்
காரிகா... என் காரிகா...
இதழோடுதான் கூடதான் தவித்திட
காத்திடு என சோதனை செய்கிறாய்
தூரிகா... என் தூரிகா
வானவில் மழையென
மழையென பெய்கிறாய்