Mani Adikkudhu Mani Song Lyrics

மணி அடிக்குது மணி பாடல் வரிகள்

Michael Raj (1987)
Movie Name
Michael Raj (1987) (மைக்கல் ராஜ்)
Music
Chandrabose
Singers
Malaysia Vasudevan
Lyrics
Mu. Metha
மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே
சின்னக் குட்டி நாத்தனா அட சேலத்தானே கட்டுனா
சின்னக் குட்டி நாத்தனா சேலத்தானே கட்டுனா
எதிரிகள தாக்குனா எல்லாத்தையும் மாத்தினா

வெள்ளரிக்கா தோட்டத்துக்கும் வேலி இருக்கு
தொட்டவள தொரத்தி விட்டா தாலி எதுக்கு
பத்து மாசமா இருந்த வீட்டுக்கு
வாடகை கேட்கவே வரமாட்டா

நெனச்சா பொம்பள அழிப்பா உங்கள
எதுத்தா யாரையும் விடமாட்டா
சட்டத்துல ஞாயமில்ல....
தர்மத்துக்கு வாயுமில்ல நாங்க கேக்குறோம்......

மணி அடிக்குது மணி அடிக்குது மதுர கோட்டையிலே
மங்கம்மா கதையச் சொல்லி சேர்த்தடிக்கையிலே

ஆடு வெட்டி நாங்க ஒரு பொங்கல் வைக்கிறோம்
ஆசையோட அதுக்குத்தானே இங்கே நிக்கிறோம்
ஆத்தா கட்டளை அத நான் தட்டல
அடிடா வேப்பில அவ மேலே

கறுப்பு கணக்கில நெருப்பு புடிக்குது
மனசு குளுருது பூப்போல
தாயொருத்தி துணை இருக்கா
தடுப்பதற்கு யார் இருக்கா வாங்க போகலாம்