Kaasu Enbadhu Song Lyrics

காசு கையில் இல்லாட்டா பாடல் வரிகள்

Maya Kannadi (1994)
Movie Name
Maya Kannadi (1994) (மாயக் கண்ணாடி )
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா
காசு பணம் என்னும் ஒரு வட்டத்திலே
பூமி இது சுத்துதப்பா மொத்தத்திலே
எத்தனையோ ரூபம் உண்டு ரொக்கத்துக்கு
ஏழை மக்கள் வாழ்க்கை மட்டும் துக்கத்துக்கு
அட மதிப்பு கிடைப்பதும் மதிய கெடுப்பதும் பணத்தின் வேலைதான்டா
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா

ஏகப்பட்ட ஆசையுடன் பட்டணத்தை தேடி
சிறகை விரித்து விண்ணில் பறக்க பலர் வந்து போகிறார்
ஆசைபட்ட அத்தனையும் மாறிவிடும் போது
அல்லல் அடைந்து உள்ளம் உடைந்து சிலர் நொந்து போகிறார்
வாழ்க்கை என்பது பயணம் போன்றது
வளைவும் திருப்பமும் வழியை மாற்றுது
புத்தி உள்ளவன் தப்பி பிழைக்கிறான்
சிக்கிக்கொண்டவன் திகைத்து நிற்கிறான்
பட்டு பட்டு படிச்சவன் தான் மற்றவர்க்கு பாடமாகிறான்
காசு கையில் இல்லாட்டா இங்கு எதுவும் இல்லடா
உன் பேச்சு இங்கு செல்லாது உலகம் கண்டுக்காதுடா

எப்படியும் வாழ்க்கையிலே வெற்றி பெற எண்ணி
எந்த தொழிலும் செய்ய நினைத்து சில உள்ளம் அலையுது
ஆயிரத்தில் ஒன்று மட்டும் எண்ணியது போல
வெற்றி படியை எட்டி பிடித்து கொடி நாட்டி செல்லுது
கனவு காணவே பலரும் சொல்கிறார்
கனவு மட்டுமே இளைஞர் காண்கிறார்
திறமை இன்றியே கனவு காண்பவன்
கானல் நீரிலே மீனுக்கலைபவன்
ஆசைக்கொரு எல்லை வச்சு அறிவுக்கு வேலை கோடுடா