Un Sirippinil Song Lyrics

உன் சிரிப்பினில் பாடல் வரிகள்

Pachaikili Muthucharam (2007)
Movie Name
Pachaikili Muthucharam (2007) (பச்சைக்கிளி முத்துச்சரம்)
Music
Harris Jayaraj
Singers
Gouthami Rao, Robby
Lyrics
Thamarai
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின்பார்வையில் மீதியும் தேய
ம் இன்று நேற்று என்று இல்லை

என் இந்த நிலை

ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில்…

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்துநிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
உன் சிரிப்பினில்…

முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பது கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில்…
ம் இன்று நேற்று…