Siragi Un Sirippaala Song Lyrics

சிறகி உன் சிரிப்பால பாடல் வரிகள்

Mehandi Circus (2019)
Movie Name
Mehandi Circus (2019) (மெஹந்தி சர்க்கஸ்)
Music
Sean Roldan
Singers
Sathyaprakash
Lyrics
Yugabharathi
சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா

நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா


வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்

எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்

ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன் என்

சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி