Thottilil Thodangidum Song Lyrics

தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு பாடல் வரிகள்

Kanne Kaniyamuthe (1986)
Movie Name
Kanne Kaniyamuthe (1986) (கண்ணே கனியமுதே)
Music
M. S. Viswanathan
Singers
Vani Jayaram
Lyrics
Kannan

தனக்குஜனுதகிட தகஜம் தரித்தஜம்
ரித்தஜம் தஜம் ஜம்
திமிதரிகிட துத்துந்தரிகிட தகததிம்ததா
தனக்கு ஜொனுத ஜொனுத தனக்குஜம்
தனதீம்த தனதீம்த தா..
ததரதானி உதரதானி தகதஜம்
ததீம்த ததீம்த ததீம்த ததீம்த தீம்

திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

தனுக்கு ஜனக்கு நிநிபப ரிசரி
தனதீம்த பநிநிசரிசா
தத்தரதானி உத்தரத்தானி தகதஜம்
பரிச பசநி மநிப ரிபமரி
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்

தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு
நால்வர் தோள் தரும் நேரமோர் பாட்டு

எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
எத்தனை சுமைகள் உன் மனதில் இருப்பினும்
இறக்கி வைக்கலாம் இசை கேட்டு
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு..தாலாட்டு

ஆஆஆஆ...ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ
ஆரிராரிராரி ராரிராராரோ....

ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை – தரம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை
ஓசைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை – தரம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இசைதானே எல்லை

பாலூட்டும் மார்புக்குள் இதயத்தின் சத்தம் – குழந்தை
காதுக்குள் அரங்கேறும் தாளத்தின் முத்தம்..ம்ம்ம்ம்..

விளையாடும் காலத்தில் கொலுசென்னும் சலங்கை
அதில் ஜதி போட உருவாக்கும் நாட்டிய அரங்கை
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச

தண்ணீரும் ஜதி பாடி கரையோடு மோதும்
மண்ணில் தவளைகள் ராகத்தை மழைக்காலம் ஓதும்
ரீங்கார வண்டுக்குள் என்னென்ன வித்தை
வீசும் காற்றுக்கு மரமாட தந்தாயோ ஸ்வரத்தை

இமை தாவும் கண்ணீரில் முகமேடை நடனம்
என் இறைவா உன் திருமேனி எழுந்தாட வரணும்

திமிதரிகிட துத்துந்தரிகிட பநிநிச
சரிநிநிசரி நிசபநி தனுஜகிட தனத தீம்தீம்
தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு..தாலாட்டு....