Kaattu Payale Song Lyrics

காட்டு பயலே கொஞ்சி போடா பாடல் வரிகள்

Soorarai Pottru (2020)
Movie Name
Soorarai Pottru (2020) (சூரரைப் போற்று)
Music
G. V. Prakash Kumar
Singers
Dhee (Dheekshitha)
Lyrics
Snehan
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பையடா நீ

கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ

என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ

யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி

லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…

பாசத்தால என்ன நீயும் பதற வெக்குற
பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச மேய வெக்குற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சி கொட்ட வெக்குறியே வாடா

நீ எச்சி ஊற வெக்குற
என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா

நான் சாமத்துல முழிக்கிறேன்
சார பாம்பா நெளியுறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா

உன் முரட்டு ஆசை எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்

என்ன செய்ய உன்ன...
தின்னு நீக்க போறேன்...
கொஞ்சம் கொஞ்சமாக...
கொஞ்சி கொள்ள போறேன்...

வீச்சருவா இல்லாமலே வெட்டி
சாய்க்குறே
வேலு கம்பு வார்த்தையால குத்தி
கிழிக்கிற
சூதனம்மா அங்க இங்க கிள்ளி
வைக்குற
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி
வெக்குற

நீ தொட்டு பேசு சீக்கரம்
விட்டு போகும் என் ஜொரம்
வெட்டி கதை பேச வேண்டாம்
வாடா

நான் ஓலை பாய விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு
போடா

நீ எதுக்கு தயங்கி நிக்குற
என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா முரடு புடிக்குற கட்டி
அள்ளுடா

உன் முரட்டு திமிரு எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
பொத்தி வெச்ச ஆச...
பொங்குதடா உலையா...
பொத்துக்கிட்டு ஊத்த...
போகுகுதடா மழையா...

லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…