Paadum kural Song Lyrics

பாடும் குரல் இங்கே பாடல் வரிகள்

Nadodi (1966) (1966)
Movie Name
Nadodi (1966) (1966) (நாடோடி)
Music
M. S. Viswanathan
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
நாயகனின் கோயிலிலே நாள் முழுதும் காத்திருந்தேன்
காத்திருந்த கண்களுக்கே அவ்ன்
காட்சி தர வேண்டுமம்மா காட்சி தர வேண்டுமம்மா

பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே?
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?

தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே?
தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே?
ஆபத்து நீங்கிய மலரிங்கே
ஆபத்தில் உதவிய துணை எங்கே?
ஆபத்தில் உதவிய துணை எங்கே?

பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே?
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?

நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
வருவார் என்பதை நானறிவேன்
வருகின்ற நாளை யாரறிவார்?
வருகின்ற நாளை யாரறிவார்?

பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே?
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே?