Naame Mudalaali Namakkini Song Lyrics
நாமே முதலாளி நமக்கினி பாடல் வரிகள்
![Thanthai (1953)](https://www.varigal.com/upload/movies/thanthai.jpg)
- Movie Name
- Thanthai (1953) (தந்தை)
- Music
- P. S. Divakar
- Singers
- Lyrics
- Kannadasan
நாமே முதலாளி நமக்கினி நாமே தொழிலாளி
இம் மானிட வாழ்வின் போரினிலே
முன்னேறும் படையாளி.....
ஓரோர் செவ்விய ரத்தத் துளியையும்
உஷ்ண வேர்வை மழையாக்கி
உழைப்பினாலே மண்ணிலே
பொன் விளைவிப்போம்
ஒருவரும் பிச்சைக் காசு தர வேண்டாம்
உடல் தன் வலிமையால்
நரம்பு துடிக்கும் வரை பார் மீதிலே.....
உடலின் சக்தியில் கலா சித்தியில்
உயர்ந்தோம் எவரோடும்
உழைப்பைத் தந்தே உரிமை கேட்போம்
ஒருவருக்கும் தாழோம் – நாம்
ஒருவருக்கும் தாழோம்.
உள்ள வேலையை தெளிவுடன் செய்தே
ஊதியந்தான் கேட்போம்
உற்ற கூலியை தட்டிப் பறித்தால்
உயிர் ஈந்தும் பெறுவோம் – நாம்
உயிர் ஈந்தும் பெறுவோம்......