Meenakshi Kaiyil Song Lyrics
மீனாட்சி கையில் உள்ள கிளியே பாடல் வரிகள்
- Movie Name
- Vidukathai (1997) (விடுகதை)
- Music
- Deva
- Singers
- K. S. Chithra, Kalpana Raghavendar
- Lyrics
- Agathiyan
நன்றே வருகினும் தீதே விளைகினும்
நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம்
எனக்கு உள்ளதெல்லாம்.....
அன்றே உனது என்று அளித்து விட்டேன்
அழியாத குணக்குன்றே அருட்கடலே
இமவான் பெற்ற கோமளமே......
மீனாட்சி கையில் உள்ள கிளியே
தாலாட்டி தூங்க வைப்பேன் கிளியே
இணைந்ததெல்லாம் விதி வசமே
பிரிந்து விட்டால் சுகம் தருமே
புது வழித் தேடு தூக்கம் வருமே....
மீனாட்சி கையில் உள்ள கிளி நான்
நீ ஆட்சி செய்து வரும் கிளிதான்
இணைந்ததெல்லாம் புது சுகமே
நடந்ததெல்லாம் மதி வசமே
மனதினை மூட தூக்கம் வருமே.....
தாலியென்ன வேலி இங்கு
தாண்டிடு சுகமல்லவா
நீ புதுமை பெண்ணல்லவா
அந்த வேலிக்குள்ளே தாய்மை என்னும்
வேள்வியே பெரிதல்லவா
வாழ்வின் வேதம் அதுவல்லவா
பெண்மையே இங்கேது பொது நீதி
சக்தியே தந்தாயே சரி பாதி
பெண்கள் சிலையோ துன்பம் விலையோ
அன்பில் விழுவோம் இன்பம் பெறுவோம்
இனி நித்தம் நித்தம் புது வாழ்வே வா வா...(மீனாட்சி)
தீயைச் சுற்றும் பெண்ணை இங்கு
தீயே சுடுமல்லவா இது ஆண்கள் குணமல்லவா
அந்த தீயினுள்ளே விரலை வைத்தால்
தோன்றும் குளிரல்லவா அதுதான் காதல் சுவையல்லவா
அன்பிலே பெண் போதை தெரியாதா
அன்னையாய் நாம் வாழ்வோம் முடியாதா
நெஞ்சில் சுமப்பாய் நெஞ்சம் தவிப்பாய்
கொஞ்சம் வலிக்கும் கொஞ்ச இனிக்கும்
இனி நித்தம் நித்தம் புது வாழ்வே வா வா...(மீனாட்சி)