Bale Saadhu Engal Song Lyrics
பலே சாது எங்கள் பாபூஜி பாடல் வரிகள்
![Thiruttu Raman (1955)](https://www.varigal.com/upload/movies/thiruttu-raman.jpg)
- Movie Name
- Thiruttu Raman (1955) (திருட்டு ராமன்)
- Music
- Pendyala Nageswara Rao
- Singers
- P. Susheela
- Lyrics
பலே சாது எங்கள் பாபூஜி
பாலர்கள் தாத்தா பாபூஜி
புன்னகையாலே வலை வீசி
பூமியை மயக்கும் பாபூஜி (பலே)
உயர்வும் தாழ்வும் ஒளி என்றாரே
உள்ளம் கலந்தால் பலம் என்றாரே
மாநிலம் எல்லாம் ஒன்றென்றாரே
மனதில் அன்பை பொழிந்தாரே...(பலே)
இளம் காளைப் போல் எழுந்தாரே
எடுத்தடி முன்னே வைத்தாரே
புஜம் தாங்கியே புகழ் பாடியே
தேசம் பிறந்து நடந்ததே
கதி கலங்கியதே சாம்ராஜ்யம்
வந்தது பாரத ஸ்வயராஜ்யம்
வந்தது பாரத ஸ்வயராஜ்யம்...(பலே)
சத்யம் அஹிம்சையே சாந்தி மார்க்கமென
ஜகத்தினில் ஓர் நெறி உணர்த்திட்டார்
மாநிலம் எல்லாம் போற்றும் சாது
மஹாத்மா என்றே பணிந்தாடு.....(பலே)