Akka Petha Jakkavandi Song Lyrics

அக்கா பெத்த ஜக்காவண்டி பாடல் வரிகள்

Marudhu (2016)
Movie Name
Marudhu (2016) (மருது)
Music
D. Imman
Singers
Niranjana Ramanan, Anirudh Ravichander
Lyrics
Yugabharathi
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

முக்காதுட்டா என்ன
நீயும் எண்ணாம இருந்த
முத்தம் வச்சு திம்பேன் உன்ன
கல்யாண விருந்தா

குத்துக்கல்லாட்டம் இருக்குறியே
நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே

செங்க மண்ணாட்டம்
சிவக்குறியே நான் செல்லம்
கொஞ்சாட்டி கருக்குறியே

……………………………..

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
செல்லக்குட்டி சேலைகட்டி
வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி
போல ஒன்னு தந்தாலும் அழகு

கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக்
கொண்டாலும் அழகு மல்லுக் கட்டி
என்ன முட்டிக் கொன்னாலும் அழகு

முட்டி தொட்டாடும்
முடியழகு நீ முன்னே
வந்தாதான் முழு அழகு

ஒட்டிக் கொள்ளாம
எது அழகு நீ எட்டிப் போகாம
நிதம்பழகு

விளைஞ்ச தோட்டம்
பறிக்க வாட்டமா பொறந்த
பொண்ணு நீதானே

எதையும் மிச்சம்
வைக்காம நீ அங்க இங்க தொட
நான் சொந்தம் ஆவேனே

உன் முன்னழகு
பின்னழகுல இச்சு வைக்கட்டுமா
இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா

உன் பல்லழகுல
சொல்லழகுல எச்சி பண்ணட்டுமா
பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா

பறிமாறாமா பசி
ஆறாதே பதமா இதமா தாறியா

வத்திக்குச்ச நீ
கொளுத்துறியே என்ன
ஒத்தி வைக்காம எாிக்குறியே

பொத்தி வைக்காம
உசுப்புறியே என்ன தெத்து
பல்லால சாிக்கிறியே

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி
நீதாண்டி கிளியே
உன்ன பக்கா பண்ணி
கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே

கட்டிக்கொள்ள
என்னத் தந்தா உன்னோட வருவேன்
சொத்து சுகம் எல்லாம் நீதான்
தன்னால தருவேன்

அக்கா பெத்த ஜக்காவண்டி
அக்கா பெத்த ஜக்காவண்டி

ஏய் ஒத்த சொல்லால
உலுக்குறியே என்ன சைனா
பீங்கானா உடைக்கிறியே

பட்டு சொக்காயா
ஜொலிக்கிறியே என்ன
கட்டிக்கொள்ளாம கசக்குறியே

ஏய் ஒத்த சொல்லால
உலுக்குறியே என்ன சைனா
பீங்கானா உடைக்கிறியே
பட்டு சொக்காயா
ஜொலிக்கிறியே என்ன
கட்டிக்கொள்ளாம கசக்குறியே
அக்கா பெத்த ஜக்காவண்டி