Enna Enna Song Lyrics

என்னென்ன எண்ணங்கள் பாடல் வரிகள்

Mugaraasi (1966)
Movie Name
Mugaraasi (1966) (முகராசி)
Music
K. V. Mahadevan
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளா த இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ


என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளா த இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ



மாடத்தில் பஞ்சணை விரிக்கும்
மயக்கத்தில் அடிக்கடி சிரிக்கும்
கூடத்தில் விளக்கினை அணைக்கும்
கோலத்தை ஒரு முறை நினைத்தால்..


தாமரைக் கன்னங்கள் சிவக்கும்
தாளாது செவ்விதழ் துடிக்கும்
நாணத்தில் மேனியை மறைக்கும் -
அந்தநாட்களை ஒரு முறை நினைத்தால்..


என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளா த இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ


வேடிக்கைப் பேச்சுக்கள் வளரும் -
சிறுவேதனை போல் இன்பம் மலரும்
வாடிக்கையாய் அது நடக்கும் -
அந்தமஞ்சத்தை நெஞ்சத்தில் நினைத்தால்


ஊடலும் கூடலும் தொடரும் -
பலஓவியம் மேனியில் படரும்
வாடிய கொடியென வளையும் -
அந்தவாழ்க்கையை ஒரு முறை நினைத்தால்


என்னென்ன என்னென்ன எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளா த இன்பங்கள் கொண்டாடுமோ
செவ்வந்திப் பூவோடு பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும் போராடுமோ