Ulagile Azhagi Song Lyrics

உலகிலே அழகி பாடல் வரிகள்

Maya Kannadi (1994)
Movie Name
Maya Kannadi (1994) (மாயக் கண்ணாடி )
Music
Ilaiyaraaja
Singers
Vijay Yesudas
Lyrics
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல் உண்மையைத்தான் உண்மையைத்தான்
பெண்கள் மனதில் என்ன நினைப்பு புரிவதில்லை
அழகு ராணி உன் மனதினை
ஆள வேண்டும் தலைவனாய்
நிஜத்திலே அழகன் நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உள்ளத்திலே உள்ளதை சொன்னேன் உண்மையைத்தான் உண்மையைத்தான்

கட்டழகை விட்டுவிட்டு கண்ணில் என்ன கண்டாய்
கற்சிலை போல் நின்று என் உயிரை கிள்ளுகின்றாய்
காதலனாய் கண்கள் தானே சுட்டி காட்டியது
மன்னவனாய் உந்தன் நெஞ்சில் முடி சூட்டியது
அழகு எல்லாம் விழிகள் சொல்லும் மொழிகள் தானே
காதல் மழைக்காலங்களில் கையில் குடை வேண்டாமடி
நாதஸ்வரம் கேட்போம் நனைந்தே
நிஜத்திலே அழகன் நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உள்ளத்திலே உள்ளதை சொன்னேன் உண்மையைத்தான் உண்மையைத்தான்

பூக்களிலே வந்த நிறம் என்றும் மாறிடுமா
பெண்மை எனை வண்ண நிறமென்ன மாறிடுதே
காதல் நிறம் மாறும் என்றால் அது காதல் இல்லை
நம்மை போலே காதல் கண்டார் இங்கு யாரும் இல்லை
பிறவி யாவும் தொடரும் அன்பே நமது சொந்தம்
வங்கக்கடல் ஆழம் வரை சங்க தமிழ் பாடும் வரை
வாழும் நமது காதல் உலகில்
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
நிஜத்திலே அழகன் நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
பெண்ணின் மனது சொல்ல நினைக்கும் மொழிகள் இல்லை
அழகு தலைவா உன் மனதிலே
அமர வேண்டும் தலைவியாய்
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
நிஜத்திலே அழகன் நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்