Oodha Oodha Song Lyrics

ஊதா ஊதா பாடல் வரிகள்

Minsara Kanna (1999)
Movie Name
Minsara Kanna (1999) (மின்சாரக் கண்ணா)
Music
Deva
Singers
Hariharan, Harini
Lyrics
ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ
நீ பார்த்தால் ஊதா பூவே
நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே
சுகம் காணும் ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூவே

ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை
நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா
உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா.

அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா.

ஊதா ஊதா ஊதா பூ
உன் பேர் தவிர ஓதா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழை கூந்தல் மீது
என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு
இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று
எனை விலைபேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு
நான் உனை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை

என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ
நீதான் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ
ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே
நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே
சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ
இன்றும் என்றும் உதிரா பூ