Soru Kondu Pora Song Lyrics

சோறு கொண்டு போறப்புள்ள பாடல் வரிகள்

En Asai Machan (1994)
Movie Name
En Asai Machan (1994) (என் ஆசை மச்சான்)
Music
Deva
Singers
K. S. Chithra
Lyrics
Na. Muthukumar
ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

பெண் : வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

***

ஆண் : சோலைக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

பெண் : சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமங்கிட்ட மயங்கும் நின்னு

ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி

பெண் : காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

ஆண்குழு-1 : ஆ..ஹா..ஆ..ஆ...பிர்.ர்... ஆ..ஹா..ஆ..ஆ... ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ... ஏ...ஏ... டுர்..ர்...ர்...ஆஹ்ஹா..ஓ...

***

ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு

பெண் : கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு
இஷ்டம் போல அள்ளிக்கட்டு

ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு

பெண் : கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு

ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

பெண் : ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு