Gadothkaja Song Lyrics

கடோத்கஜா கடோத்கஜா பாடல் வரிகள்

Pammal K. Sambandam (2002)
Movie Name
Pammal K. Sambandam (2002) (பம்மல் கே. சம்பந்தம்)
Music
Deva
Singers
Mahalakshmi Iyer, Srinivas
Lyrics
Vaali
சிரித்த முகம்
அழகு சிரித்த முகம்
தேயாத முழு நிலவே
ஓயாத அலை காட்டும்
சிரித்த முகம் அழகு
சிரித்த முகம்

கடோத்கஜா
கடோத்கஜா கடோத்கஜா
கலாதரா விவாகமே
விடாதுடா

இன்றோடு
ஹனுமார் பக்தன்
பிரம்ம சாரியம்
முடிகிறதே அன்போடு
கை தளம் பற்ற கன்னி
நிலா தான் வருகிறதே

ஆயிரத்தில்
ஒருவன் என்று அழகன்
என்று அறிஞன் என்று
ஆசை வைத்த இள
மான் நீயே கிடைத்தாயே

ஆனவரை
விழியால் பேசு
மௌனம் என்னும்
மொழியால் பேசு
ஆக மொத்தம் அன்பே
உனக்கு நான் தான்
நாயகனே

கடோத்கஜான்
கலாதரன் கண்ணே
உந்தன் கையில் சரண்

……………………

டிக் டிக் என்று
சத்தம் உன்னாலே
என்னுள்ளே கேட்கின்றதே
கண்ணே

பக் பக் என்று
அஞ்சி உன்னாலே
என் உள்ளம் வேகின்றதே
கண்ணா

ஆ ஒரே நாளில்
காதல் நோய் தான்
உன்னால் வந்ததே
தோழி

ஒரே ஊசி
போட்டால் போதும்
உயிர் வாழுமே
தோழனே தோழனே

ஓ மாலையிட
ஒரு நாள் பார்த்து மண
நாள் பார்த்து திருநாள்
பார்த்து

சேலை
தொடும் மறு நாள்
வந்து மறுப்பேனா

காலை நெஞ்சம்
கேட்காதம்மா கடிகாரம்
தான் பார்க்காதம்மா
காற்று என்ன நேரம்
பார்த்தா நதியில்
குளிக்கிறது

கடோத்கஜா
கடோத்கஜா

தையல் போட்டு
என்னை தைத்தாயே
தையல் இனி
உன்னோடுதான் கண்ணே

கையை போட்டு
என்னை கையாட கை
சேரு என்னோடு
தான் கண்ணா

விழி மேய்ந்து
ஓயும்போது விரல்
மேயுமே தோழி
கோடி பூவும் கூச்சம்
கொண்டு மடி சாயுமே
தோழியே தோழியே

பூங்கரத்து
வலையாடாதா
வலையாடதான்
விளையாடாதா
வாய் சிவப்பு உன்னால்
கொஞ்சம் வெளுக்காதா

நேற்று வரை
அடைத்தே வைத்த
மடையை நீ தான்
உடைத்தாய் இன்று
பாவி மனம் பாயை
போட பாடாய்
படுத்திறதே

கடோத்கஜா
கலாதரா விவாகமே
விடாதுடா

இன்றோடு
ஹனுமார் பக்தன்
பிரம்ம சாரியம்
முடிகிறதே அன்போடு
கை தளம் பற்ற கன்னி
நிலா தான் வருகிறதே

ஆயிரத்தில்
ஒருவன் என்று அழகன்
என்று அறிஞன் என்று
ஆசை வைத்த இள
மான் நீயே கிடைத்தாயே

ஆனவரை
விழியால் பேசு
மௌனம் என்னும்
மொழியால் பேசு
ஆக மொத்தம் அன்பே
உனக்கு நான் தான்
நாயகனே

கடோத்கஜா
கடோத்கஜா