Palapalanguthu Thalathalanguthu Song Lyrics

பளபளங்குது தளதளங்குது பாடல் வரிகள்

Oor Mariyadhai (1992)
Movie Name
Oor Mariyadhai (1992) (ஊர் மரியாதை)
Music
Deva
Singers
S. P. Sailaja, Swarnalatha
Lyrics
Kalidasan
குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே
பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே
மூலியே நீலியே தூரில்லாத வாளியே

பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

அய்யே ஆந்தக் கண்ணி முட்டக் கண்ணி
பூனைக் கண்ணி பொட்டக் கண்ணி வாடி ஹே வாடி
பட்டுச்சட்ட குட்டச்சட்ட வாயடச்ச மண்ணு சட்ட
வாடி கிட்ட வாடி

அடி மலையனூரு பழைய நீலி
உனக்கொரு மமதை ஏன்டி கர்வம் ஏண்டி புடி புடி
ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி

பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

அடி கொத்தமல்லி கொண்ட வச்ச
கொய்யாத் தோப்பு ராணி உங்க
கும்பலெல்லாம் எங்க முன்னே வத்திப்போன கேணி
அடி பட்டாளத்து துப்பாக்கிக்கு தீந்து போச்சு தோட்டா
அட சுட்டாப் பாரு சுட்டாப் பாரு ரொம்ப ரொம்ப லேட்டா

உருட்டுற கண்ணால மெரட்டி பாக்கும் அம்மாவே
கறுக்கிற பித்தளை மினுக்குறாளே சும்மாவே
வேகாத மண்ணுக் கொடமே
வம்பு வேணான்டி எங்களிடமே..ஓஓஹோ ஓஹ்

ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி..

அடி முக்கி முக்கி ரெக்கயாட்டம் முட்டப் போடுவாடி
நீ முக்கா துட்டுக்கு விக்க வந்த மூலி அலங்காரி
ஹே சந்து சந்தா சுத்தி வரும் குந்தாணியே வாடி
நீ சந்தக் கட மத்தியிலே பந்து வித்த கேடி

போடி போடி புல்லாக்கு புளிச்சு போன புண்ணாக்கு
கேளே கேளு மாங்கா நீ விழுந்து போச்சு முந்தாணி
கங்காணி கோண முகமே
யாரும் திங்காத வேப்பம் பழமே ஹோய் ஹோய்

கஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி

பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல

குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே
பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே
மூலியே நீலியே தூரில்லாத வாளியே

பளபளங்குது தளதளங்குது
பழுத்த மாம்பழம் இந்த தோப்புல
குடுகுடுங்குற கெழவி எல்லாம்
கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல....ஹய் ஹய்...