Elantha Pazham Song Lyrics

எலந்த பழம் பாடல் வரிகள்

Madhurey (2004)
Movie Name
Madhurey (2004) (மதுர)
Music
Vidyasagar
Singers
Anuradha Sriram, Tippu
Lyrics
எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்
பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான்

முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மலை ஏத்து
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்

சார பாம்பு சடை சலவை செஞ்ச இடை
சாட்டா வீசும் நடை உனக்குதான்
மார்பில் மச்சபடை மனசில் ரெட்டை கொட
தோதா தூக்கும் இடம் உனக்குதான்
என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்குதான்
என் கொழுகொழுப்பு இலவசம் உனக்குதான்
என் இடுப்பும் உனக்குதான் கழுத்தும் உனக்குதான்
இன்ச்சு இன்ச்சா உனக்குதான்

அய்யோ முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மலை ஏத்து
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் உனக்குதான்

குண்டு குண்டுகொடி ரெண்டு ரெண்டு மடி
நண்டு நண்டு புடி உனக்குதான்

சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

என் படுக்கையிலே பாதி இடம் உனக்குதான்

என் மனசுகுள்ள மொத்த இடம் உனக்குதான்

தேமா உனக்குதான்

புளிமா உனக்குதான்

மாமா நான் உனக்கேதான்

ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி

எலந்த பழம் எலந்த பழம் உனக்குதான்
செக்க செவெந்த பழம் செவெந்த பழம் உனக்குதான்

குங்கும பூவும் குங்கும பூவும் எனக்குதான்
இந்த கொஞ்சுபுறாவும் கொஞ்சுபுறாவும் எனக்குதான்

பால் பழம் உனக்குதான் பாயாசமும் உனக்குதான்
சந்தனம் உனக்குதான் சக்கர பொங்கல் உனக்குதான்

ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி