Oru Pakkam Oru Nyaayam Song Lyrics

ஒரு பக்கம் ஒரு நியாயம் பாடல் வரிகள்

Adharmam (1994)
Movie Name
Adharmam (1994) (அதர்மம்)
Music
Ilaiyaraaja
Singers
Ilaiyaraaja
Lyrics
Vaali
ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்
இரு பக்கத்திலும் நியாங்கள் உள்ளது
அதை குற்றம் என்று
யார் இங்கே சொல்வது

இரண்டும் இங்கே
ஒரு தாயின் மக்களே
அது செல்வதும் எங்கே
அழிவென்னும் திக்கிலே

இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா
இது தர்மம்மா தர்மம்மா
அதர்மம்மா

ஒரு பக்கம் ஒரு நியாயம்

வன்முறை செயலின் கொடுமைகளை
இங்கே நான் கண்டால்
என் இதயம் தாங்காது
தானே பதறுதடா
முன்னோர் வாழ்ந்த பெருமை எல்லாம்
ஒவ்வொன்றாய் நினைத்தால்
என் மனமே எரிமலையாய்
வெடிச்சே சிதறுதடா

எத்தனை காலம் எத்தனை காலம்
வாழ்க்கையை தேடுவது
எச்சில் இலைக்கு காத்து கிடக்கும்
காக்கையை துரத்துவது

சகோதரா இங்கே
அழிவது யாரடா………
சகோதரா இது நடப்பது
யாரால் கூறடா…….

ஒரு பக்கம் ஒரு நியாயம்
இன்னொரு பக்கம் இன்னொரு நியாயம்