Ilaiyavale Naan Iniyavale Song Lyrics

இளையவளே நான் இனியவளே பாடல் வரிகள்

Chinna Chinna Aasaigal (1989)
Movie Name
Chinna Chinna Aasaigal (1989) (சின்ன சின்ன ஆசைகள்)
Music
Chandrabose
Singers
K. S. Chitra
Lyrics
Mu. Metha
இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும்
நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்

உன்னோடு நான்...ஆஹ்.....ஆஆஹ்....ஆஹ்...
உன்னோடு நான் உறவாடுவேன்
உனக்காகவே உயிர் வாழுவேன்
இதயம் இரண்டும் இணையும்
ஒரு ஊர்கோலமும் போகிறதே

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன்
தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன்
மகராஜன் நீ மகராணி நான்
புவி யாவும் நம் அரசாங்கம் தான்
உலகம் இனிமேல் நமது ஒரு செந்தாமரை என் மனது

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே