Neeyillai Nilavillai Song Lyrics

நீயில்லை நிழலில்லை பாடல் வரிகள்

Poochudavaa (1997)
Movie Name
Poochudavaa (1997) (பூச்சூடவா)
Music
Sirpi
Singers
Hariharan, Sirpi, Vairamuthu
Lyrics
Vairamuthu
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை

உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல்....

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

ப‌கலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடுமுன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை