The Life of Ram Song Lyrics

கரை வந்த பிறகே பாடல் வரிகள்

96 (2018)
Movie Name
96 (2018) (96)
Music
Govind Menon
Singers
Pradeep Kumar
Lyrics
கரை வந்த பிறகே... பிடிக்குது கடலை...
நரை வந்த பிறகே... புரியுது உலகை...

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே 
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

வாழா என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள்ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன் 
இங்கே இன்றே ஆள்கிறேன்

ஏய்... யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில்
நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

தோ... காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

திமிலேரி காளை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்

ஏதோ ஏகம் எழுதே... ஆஹா ஆழம் தருதே...
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ... ஆரோ ஆரிராரிரோ...

கரை வந்த பிறகே... பிடிக்குது கடலை...
நரை வந்த பிறகே... புரியுது உலகை...

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே