Ithai en Ninaivai Song Lyrics

இதை என் நினைவை செய்ய மாட்டாயா பாடல் வரிகள்

Christian Songs (2000)
Movie Name
Christian Songs (2000) (கிருஸ்தவப் பாடல்கள்)
Music
Randoms
Singers
Randoms
Lyrics
Randoms
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா?
என் உடலை உண்டு உயரமாட்டாயா?
குருதி அருந்தி திருந்த மாட்டாயா 
என் குருதி அருந்தி திருந்த மாட்டாயா?
என்னை போல வாழ மாட்டாயா?
இதை என் நினைவாய் செய்ய மாட்டாயா?
என் உடலை உண்டு உயரமாட்டாயா?


கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்ட சொன்னேன் 
தீமை செய்தால் நன்மை செய்ய சொன்னேன் 
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன்?
வெறும் வார்த்தை அல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன்.


இதை என் நினைவை  செய்ய மாட்டாயா?
என் உடலை உண்டு உயரமாட்டாயா?


பணிவிடை பெற அன்பு பணியை செய்ய சொன்னேன் 
தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதி என்றேன்.
இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன்?
உன்னை வாழ செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன்.