Then Poove Song Lyrics

தேன் பூவே பூவே வா பாடல் வரிகள்

Anbulla Rajinikanth (1984)
Movie Name
Anbulla Rajinikanth (1984) (அன்புள்ள ரஜனிக்காந்)
Music
Ilaiyaraaja
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் 
நூறு ராகம் நெஞ்சோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
ஹோய்...கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட


இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
ஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் 
நூறு ராகம் நெஞ்சோடு தான்


உனை நினைத்தேன் பூவே பூவே வா
லால...லா...லா..
லா...லால..லால....லா...லால..லா...லா..