Penjakka Song Lyrics

பேஞ்சாக்கா மழைத்துளியோ பாடல் வரிகள்

Kangaroo (2014)
Movie Name
Kangaroo (2014) (கங்காரு)
Music
Srinivas
Singers
Swetha Mohan
Lyrics
Vairamuthu
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
என் எத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொற
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமர
உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொர
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு

சொத்து பத்து வேணுமுன்னு உன்ன கேட்டாளா
பத்து காசு நெத்தி போட்டு போதும் கண்ணாளா
காத்து மழை குளுருக்கொரு கம்பளி கேட்டாளா
கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா
கால் வளர்ந்த ஆம்பிளையே…
கால் வளர்ந்த ஆம்பிளையே கண்ணெடுத்து பாரு
என் கண்ணுக்குள்ளே நீறு
நான் கட்டிவச்ச கற்பு எல்லாம் கொட்டி தரேன் கூட இரு
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு

மூணு முடி கயிறு போட்டா நான் உன் பொண்டாட்டி
மூணு முழம் கயிறு வேணும் நீயும் இல்லாட்டி
கட்டிக்கிட்டு காதல் பண்ண எண்ணம் வராட்டி
திட்டி ரெண்டு வாட்டி சொல்லு என்ன பாராட்டி
அத்துவன காட்டுக்குள்ள …
அத்துவன காட்டுக்குள்ள ஒத்தையிலே இருக்கேன்
நான் உன்ன நம்பி இருக்கேன்
உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு ராப்பகலா நான் கிடக்கேன்
பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு
நான் வாழ்ந்தாக்கா வாழுவது உன்னோடு
சாஞ்சாக்கா சாய்வது உன் தோளோடு
மூச்சு ஒஞ்சாக்கா ஓய்வது உன் மார்போடு
என் எத்தத்துக்கும் இரக்கத்துக்கும் என்ன கொற
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த செந்தாமர
உன்ன ஒரு தலையா காதலிச்சா தறுதலையா சொல்லு தொர