Idho Endhan Dheivam Song Lyrics

இதோ எந்தன் தெய்வம் பாடல் வரிகள்

Babu (1971)
Movie Name
Babu (1971) (பாபு)
Music
M. S. Viswanathan
Singers
Lyrics
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே...

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தனிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஆ... ஆ... ஆ... ஆ... ஓ... ஓ... ஓ... ஓ...