Kathalikka Pennoruthi Song Lyrics

காதலிக்க பெண்ணொருத்தி பாடல் வரிகள்

Vedi (2011)
Movie Name
Vedi (2011) (வெடி)
Music
Vijay Antony
Singers
Andrea Jeremiah, Naresh Iyer
Lyrics
Kabilan

காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே
யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ

மன்மதனின் தாய்மொழி நான்
மீசையில்லா மின்மினி நான்
தித்திடும் நனனா தீக்குச்சி நான் நான்னா
தென்றலுக்கு தங்கச்சி நான் (காதலிக்க)

நான் ஒரு விண்மீனைக் கண்டேனடி பகலில்
நீ இவன் கண்ணுக்குள் கைத் தட்டினாய் இரவில்

கூந்தல் வீசி தூண்டில் போட்டால்
மீசை யாவும் மீனாய் மாட்டும்
பாம்பைப் போல பார்வை பார்த்து
ஆணின் நெஞ்சை கொத்தாதே

வீணை வேகம் யானை தந்தம்
நீதான் எந்தன் ஆதி அந்தம்
வெள்ளைப் பற்கள் வைரக் கற்கள்
என்னை மென்று தின்னாதே (காதலிக்க)

பூக்கள் எல்லாம் ஒவ்வோர் வண்ணம்
பூவே உன்னில் ஏழு வண்ணம்
கிள்ளிப் பார்க்க கைகள் நீளும்
தள்ளித் தள்ளிச் செல்லாதே

வானம் விட்டு பூமி வந்த
எதன் தோட்ட ஏஞ்சல் நீயோ
பாதிக் கண்ணால் பார்த்து நெஞ்சை
பத்த வச்சுக் கொல்லாதே......(காதலிக்க)