Gokulathu Kanna Song Lyrics

கோகுலத்து கண்ணா பாடல் வரிகள்

Gokulathil Seethai (1996)
Movie Name
Gokulathil Seethai (1996) (கோகுலத்தில் சீதை)
Music
Deva
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
என் நாவினில் இருப்பது சரஸ்வதியே
என்னை பாட வைப்பது கணபதியே

கோகுலத்து கண்ணா கண்ணா
சீதை இவள் தானா
மானுமில்லை ராமனுமில்லை
கோகுலத்தில் நானா
சோகமில்லை சொந்தம் யாரும் இல்லை
ராவணனின் நெஞ்சில் காமமில்லை
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

ஆசைக்கொரு ஆளானவன்
ஆனந்தத்தில் கூத்தானவன்
கோபியர்கள் நீராடிட
கோலங்களை கண்டானவன்
ஆடை அள்ளி கொண்டானவன்
அழகை அள்ளி தின்றானவன்
போதையிலே நின்றானவன்
பூஜைக்கின்று வந்தானவன்
அவன் உலா உலா உலா உலா தினம் தினம் பாரீர்
தினம் விழா விழா விழா விழா வாழ்க்கையில் தேவை
கண்ணா உன்னை நாள் தோறுமே
கை கூப்பியே நான் பாடுவேன்
(கோகுலத்து..)

ஆசைக்கொரு ஆளாகினான்
கீதை என்னும் நூலாகினான்
யமுனை நதி நீராடினான்
பாண்டவர்க்கு போராடினான்
ஆடை அள்ளி கொண்டாடினான்
த்ரௌபதிக்கு தந்தாடினான்
பெண்களுடன் கூத்தாடினான்
பெண்ணை கண்டு கை கூப்பினான்
ஒரு நிலா நிலா நிலா நிலா
வந்தது நேரில்
திருவிழா விழா விழா விழா ஆனது வீடே
என் வாழ்க்கையே பிருந்தாவனம்
நானாகவே நான் வாழ்கிறேன்

கோகுலத்து கண்ணா கண்ணா
லீலை விடுவாயா
கோகுலத்தில் சீதை வந்தால்
நீயும் வருவாயா
ஆயிரம் பேர் உன்னை காதலித்தார்
ருக்மணியை நீ கை பிடித்தாய்
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ஹரே
கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே

இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே
இந்த வீட்டுக்கு வந்தவள் ருக்மணியே
இவள் வாழ்க்கைக்கு ஏற்ற பௌர்ணமியே