Vinaiyinaale Vandha Theemai Song Lyrics
வினையாலே வந்த தீமை பாடல் வரிகள்
![Aasai Magan (1953)](https://www.varigal.com/upload/movies/aasai-magan.jpg)
- Movie Name
- Aasai Magan (1953) (ஆசை மகன்)
- Music
- S. Dakshinamurthy
- Singers
- Ghantasala
- Lyrics
- Kuyilan
வினையாலே வந்த தீமை தனை
நினைந்தே நோவதேனோ
அழுவதாலே ஆவதென்ன
அன்று செய்த வினையாலே
அளவு மீறிய அன்பு செய்தனை
அமுதமே விஷம் ஆகி விட்டது
அதனை நீயும் அறிகிலாயோ..
களிப்புடனே தாலாட்டியே
கருணையோடு பாலூட்டியே
கண்ணின் மணி போலே
இரவு பகல் காத்து வந்த மகனிவனோ
நன்மையெனும் நல்ல விதையாலே-தாயே நீ
உன் மகனை உருவாக்கவிலையே
தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே
தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே
நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி
நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே
நீ செய்ததால் வந்த வினையே.....